கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கானூர் கே.பாலசுந்தரம்
அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான Cath-Lab வசதியினை உடனடியாக வழங்கக்கோரி கோரிக்கை மனுவினை தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு சி.விஜயபாஸ்கர் அவர்களிடம் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும், அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர்.V.முருகேசன், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புல முதல்வர் மருத்துவர்.D.ராஜ்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்.U.V.சண்முகம், சேத்தியாதோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கானூர் கே.பாலசுந்தரம் ஆகியோர் வழங்கினார்கள். கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட மாண்புமிகு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விரைவில் Cath - Lab வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.